டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு!....வெளியானது முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு நடப்பு ஆண்டில்  ஜூன் மாதம்  9-ம் தேதி நடைபெற்றது.

இதில் தேர்வு எழுத 20 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 7 ஆயிரத்து 247 மையங்களில் 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில், கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 724 ஆக உயர்த்தப்பட்டது.

மேலும் இரண்டாவது கட்டமாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, 8 ஆயிரத்து 932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் வெற்றி பெற்ற தேர்வர்கள் தங்கள் சான்றிதழை இணையத்தில் பதிவேற்றம் செய்ய 21-ம் தேதி கடைசி  நாள் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attention tnpsc candidates important notice out


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->