#BREAKING | பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு திடீர் ஒத்திவைப்பு.! - Seithipunal
Seithipunal


பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில், விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள், அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெற்றுள்ளது.

பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நாளைமுதல் (ஆகஸ்ட் 25-ஆம் தேதி) முதல் அக்டோபா் மாதம் 21-ஆம் தேதி வரை நடைபெற இருந்தது.

இந்நிலையில், நாளை தொடங்கியிருந்த பொறியியல் படிப்புக்கான பொது பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் வந்த இரு நாட்களுக்கு பிறகு பொது பிரிவு கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கலந்தாய்வு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை www.tndte.gov.in  (அல்லது)  www.tneaonline.org  என்ற இணையப் பக்கத்தில் தரவரிசைப் பட்டியலை பார்த்துக் கொள்ளலாம்.

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு 2 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பப் பதிவு செய்திருந்தனா். அவா்களில் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் என முழுமையாக விண்ணப்பப் பதிவை முடித்துள்ள ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் தகுதியானவா்கள் என்று அவரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BE Counseling date change 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->