#BREAKING | பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு புதிய அட்டவணை வெளியீடு.!
BE Counseling new date announce 2022
#BREAKING | பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு புதிய அட்டவணை வெளியீடு.!
BE Counseling new date announce 2022
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில், விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள், அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெற்றுள்ளது.
பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நாளைமுதல் (ஆகஸ்ட் 25-ஆம் தேதி) முதல் அக்டோபா் மாதம் 21-ஆம் தேதி வரை நடைபெற இருந்தது.
இதற்கிடையே, பொறியியல் படிப்புக்கான பொது பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நீட் தேர்வு முடிவுகள் வந்த இரு நாட்களுக்கு பிறகு பொது பிரிவு கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு வரும் செப்டம்பர் 10ம் தேதி முதல் 13 ஆம் தேதிவரை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
பொறியியல் கலந்தாய்வு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை www.tndte.gov.in (அல்லது) www.tneaonline.org என்ற இணையப் பக்கத்தில் தரவரிசைப் பட்டியலை பார்த்துக் கொள்ளலாம்.
English Summary
BE Counseling new date announce 2022