வாய்ப்பை தவறவிடாதீர்கள்... இலவச படிப்புடன் வேலைவாய்ப்பு! முழு விவரம் இதோ.! - Seithipunal
Seithipunal


இந்திய கடற்படையின் 10+2 (பி.டெக்) திட்டத்தின் கீழ் இலவச பி.டெக் படித்து முடித்து இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்ற விரும்பும் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி: Officer(Executive & Technical Branch)

காலியிடங்கள்: 40

வயதுவரம்பு: 2.7.2005 க்கும் 1.1.2008 க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: இயற்பியல், வேதியியல், கணித பாடங்கள் அடங்கிய பிரிவில் 70 சதவீத மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் JEE Main Exam - 2024 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: JEE Main Exam - 2024 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், மாதம்: பெங்களூரு, விசாகப்பட்டினம், கொல்கத்தா, போபால், செப்டம்பர் 2024.

தேர்வு செய்யப்படுபவர்கள் இந்திய கடற்படையால் வழங்கப்படும் 4 ஆண்டு இலவச பி.டெக் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படும். அதாவது Applied Electronics, Mechanical, Communication, Electronics போன்ற ஏதாவதொரு பிரிவை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

இதற்கான செலவையும் இந்திய கடற்படையால் வழங்கப்படும். படிப்பை முடிப்பவர்களுக்கு இந்திய கடற்படையில் அதிகாரியாக பணி வழங்கப்டும். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வோருக்கு ஏசி ரயில் கட்டணம் வழங்கப்படும் பி.டெக் படிப்பிற்கான வகுப்பு ஜனவரி 2025 இல் தொடங்கபடவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.7.2024
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Btech cadet entry application inform


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->