புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு! முழு விவரம் இதோ..
Cancer Medical Research Center job details
இந்திய அணுசக்தி கழகத்தின்கீழ் செயல்படும் நோயாளி பராமரிப்பு, புற்றுநோய் தடுப்பு, புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் புற்றுநோயியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கான தொழில்முறை மேம்பாடு போன்றவற்றில் மிக உயர்ந்த தரத்தை அடையும் நோக்கத்துடன் விரிவான புற்றுநோய் மையமான டாடா மெமோரியல் சென்டர் (டிஎம்சி) என்ற தன்னாட்சி அமைப்பில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பு எண். TMC/AD/52/2024
பணி: Female Nurse 'A'
காலியிடங்கள்: 58
சம்பளம்: மாதம் ரூ.44,900
வயதுவரம்பு: 30 க்குள்
தகுதி: பொது நர்சிங் பாடத்தில் பி.எஸ்சி அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்திய நர்சிங் கவுன்சில், மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய தகுதி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 1 வருடம் பணி அனுபவம் வேண்டும்.
பணி: Stenographer
காலியிடங்கள்: 6
சம்பளம்: மாதம் ரூ.25,200
வயதுவரம்பு: 27 க்குள்
தகுதி: பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று நிமிடத்திற்கு 40 ஆங்கில வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
கணினி அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவர்களுக்கு 3 மாத கணினி படிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் 1 வருடம் பணி அனுபவம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: LOWER DIVISION CLERK
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.19,900
வயதுவரம்பு: 27 க்குள்
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புடன் குறைந்தபட்சம் 1 வருடம் எழுத்தர் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
கணினியில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ், கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும். நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: wwww.tmc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கடைசி நாள்: 7.5.2024
English Summary
Cancer Medical Research Center job details