இந்தியா-சீனா எல்லையில் சத்ரபதி சிவாஜி சிலையை நிறுவிய இந்திய ராணுவம்..!
The Indian Army installed the statue of Chhatrapati Shivaji on the India China border
இந்தியா-சீனா எல்லை அருகே மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் சுமார் 14,300 அடி உயரத்தில் பாங்காங் ஏரி அமைந்துள்ளது. இங்கு இந்திய ராணுவத்தின் சார்பில் சத்ரபதி சிவாஜியின் சிலை விருவப்பட்டுள்ளது.
குதிரை மீது அமர்ந்து சத்ரபதி சிவாஜி, வாளேந்தி போருக்கு செல்வது போன்ற தோற்றத்தில் இந்த சிலை வடிவமைக்கபட்டுள்ளது.
இந்த சிலையை லெப்டினண்ட் ஜெனரல் ஜிதேஷ் பல்லா திறந்து வைத்தார். இந்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் அசைக்க முடியாத உறுதியை கொண்டாடும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சிலையானது வீரம், லட்சியம் மற்றும் தவறாத நீதி ஆகியவற்றின் சின்னமாக விளங்குவதாக தெரிவைக்கப்பட்டுள்ளது.
அவருடைய சாதனைகள் பல தலைமுறைகளுக்கு உத்வேகமாக இருக்கிறது என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
English Summary
The Indian Army installed the statue of Chhatrapati Shivaji on the India China border