#BREAKING:: சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..!! சென்னை மண்டலத்தில் 99.14% பேர் தேர்ச்சி.!!
CBSE Class 10 Result Released
இந்தியா முழுவதும் சிபிஎஸ்சி 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற்ற நிலையில் நாடு முழுவதும் 16.9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் நாடு முழுவதும் 89.3% பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் தேர்வு எழுதிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் 21,65,805 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில் 20,16,779 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் தேர்வு எழுதிய மாணவர்களில் 93.12% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் 1.28% குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் திருவனந்தபுரம் மண்டலம் 99.91% மாணவர்கள் தேர்ச்சி பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு ஆந்திரா பாண்டிச்சேரி ஒருங்கிணைந்த சென்னை மண்டலம் 99.14%மாணவர்கள் தேர்ச்சி பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
English Summary
CBSE Class 10 Result Released