சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


1012 ஆம் வகுப்பு பயிலும் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான இரண்டாம் பருவ பொது தேர்வு வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாம் பருவ பொதுத் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவ பொது தேர்வை நேரடி முறையில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி முதல் 2ஆம் பருவ பொது தேர்வு நடைபெறும் எனவும், வினாத்தாள் முறைகள் சி.பி.எஸ்.இ இணையதள பக்கத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாள் அடிப்படையிலேயே, தற்போதைய வினாத்தாள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் முந்தைய ஆண்டுகளில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு நேரடியாகவே செல்ல வேண்டும் எனவும், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு கால அட்டவனை விரைவில் வெளியிடப்படும் என்றும் மாணவர்கள் இணைய தளத்தில் பார்த்தும் தேர்வு கால அட்டவனையை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBSE Exam Date Announced


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->