மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு! எங்கே? எப்பொழுது? விண்ணப்பிக்க வேண்டும்!
Central Government Teacher Eligibility Test application
மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திர வித்யாலயா, நவோதயா போன்ற பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டிற்கான தேர்வு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தகுதி தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கு பெற ஆன்லைன் மூலம் வரும் 31ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நவம்பர் 24ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இந்தத் தேர்வு ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு முதல் தாள் மட்டும் எழுதினால் போதுமானது. எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு இரண்டாம் தாள் எழுத வேண்டியது கட்டாயம்.
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிய 👉 "கிளிக் செய்யுங்கள்" .
English Summary
Central Government Teacher Eligibility Test application