TNPSC : குரூப்-2 தேர்வு மையம் மாற்றம்.. வெளியான அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாளை குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வு நடைபெறுகிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்த வகையில் இந்த ஆண்டு மொத்தமாக 1531 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு நடைபெற உள்ளது. நாளை தேர்வு நடைபெறுகிறது. இதன் முடிவுகள் ஜூலை 5ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 32 மையங்களில் காலை 9.30 மணி முதல் 12:30  மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கினாலும், காலை 8:30 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வந்து விட வேண்டும் என்றும், அதிகபட்சமாக 8.59 மணிக்குள் வருபவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் தேர்வு மையம் மாற்றம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு-II - Group II & II A {Interview/Non Interview Posts) அடங்கியுள்ள பதவிக்கான போட்டித் தேர்வு 21.05.2022 சனிக்கிழமை அன்று காலை நடைபெற உள்ளதை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்வினை எழுதும் தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் "நல்லம் பள்ளி வட்டம், Hall No.039, Govt. Hr. Sec. School, Gooli kottai, Rajakollahalli (P.O), B. Agraharam Viz, Nallampalli Taluk என இடம்பெற்றுள்ள தேர்வு மையத்திற்கு பதிலாக "Govt. Higher Sec. School, B.Agraharam, Pennagaram Main Road." என்பதே தேர்வு மையம் ஆகும். எனவே, Hall No.039,-ல் தேர்வு எழுதும் தேர்வர்கள் " Govt. Higher Sec. School, BAgraharam, Pennagaram Main Road." என்ற தேர்வு மையத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு-IGroup: 1 & A {Interview/Non Interview Posts) அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலைப் போட்டித் தேர்வு வரும் 21.05.2022 (சனிக்கிழமை) அன்று முற்பகல் மட்டும் நடைபெறயுள்ளது. தேர்வு மையங்களில் இத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு-II - Group II & II A {Interview/Non Interview Posts) அடங்கியுள்ள பதவிக்கான போட்டித் தேர்வினை தருமபுரி மாவட்டத்தில் எழுத உள்ள தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் "நல்ல ம்ப ள்ளி வட்ட ம், Hall No.039, Govt. Hr. Sec. School, Gooli kottai, Rajakollahalli (P.O), B. Agraharam Viz, Nallampalli Taluk என இடம்பெற்றுள்ள தேர்வு மையத்திற்கு பதிலாக "Govt. Higher Sec. School, B.Agraharam, Pennagaram Main Road." என்ப தே தேர்வு மையம் ஆகும்.

எனவே, Hall No.039,-ல் தேர்வு எழுதும் தேர்வர்கள் " Govt. Higher Sec. School, B.Agraharam, Pennagaram Main Road." என்ற தேர்வு மையத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri District Group 2 Exam Hall Change


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->