பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு.. 2.11 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்.!
Engineering councelling 2.11 lakhs students apply
ஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்ததும் மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் குறிப்பாக பொறியியல் படிப்புக்கு ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு மே 6ம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 446 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ம் தேதி வெளியாகிய நிலையில் தற்போதே பல கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கிவிட்டது.
அந்த வகையில் பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் பொறியியல் கல்லுரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்காக 2,11,417 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். கடந்தாண்டு 2,11,905 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், நடப்பாண்டில் இன்னும் 4 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், தற்போதே எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
English Summary
Engineering councelling 2.11 lakhs students apply