பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆரம்பம்.!
engineering general section counsiling start today
தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும், 433 பொறியியல் கல்லுாரிகளில், இளநிலை படிப்புகளுக்கு, 1.79 லட்சம் இடங்கள் உள்ளன. இதனை நிரப்புவதற்கான கலந்தாய்வு, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வாயிலாக, இணைய வழியில் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், இந்தாண்டு கலந்தாய்வுக்கு, 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 1 லட்சத்து 99,868 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றதுடன், அவர்களுக்கான தரவரிசை பட்டியல், கடந்த 10 ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து, மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 22 ஆம் தேதி ஆரம்பமானது.
இதில் முதற்கட்டமாக, ஜூலை 22 முதல் 27- வரை முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது.
இதையடுத்து இன்று முதல் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஆரம்பமாகிறது. முதல் சுற்று கலந்தாய்வு வருகிற ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 26,654 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தக் கலந்தாய்வுத் தொடர்பான கூடுதல் விபரங்களை, https://www.tneaonline.org/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். மூன்று சுற்றுகளாக நடக்கும் இந்த கலந்தாய்வு, வருகிற செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
English Summary
engineering general section counsiling start today