#BigBreaking || அரையாண்டு தேர்வு விடுமுறை அதிகாரபூர்வ அறிவிப்பு.! 8 நாள் தொடர் விடுமுறை அறிவிப்பு.!
half early exam leave 2021
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. வெகு நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பாட சுமையை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதே சமயத்தில் காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கு பதில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், நாளையுடன் திருப்புதல் தேர்வு முடிவடையும் நிலையில், அரையாண்டு தேர்வுக்கான விடுமுறையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வரும் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 ஆம் தேதிவரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
half early exam leave 2021