தகுதி இல்லாதவர்களை ஆசிரியர் பணியில் அமர்த்துவதா? சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!
Hire unqualified teachers Chennai High Court
தகுதி இல்லாதவர்களை ஆசிரியர் பணியிலே அனுமதிக்க முடியாது என்றும் சட்ட விரோதமாக நடைபெறும் செயலை நீதிமன்றம் அங்கீகரிக்காது எனவே 3 வார காலத்திற்குள் புதுவை கல்வித்துறை இந்த வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கல்வித்துறையில் பணிபுரியும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் பணி உயர்வு பெறுகின்றபோது அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையை கடைபிடிக்காமல் புதுச்சேரி கல்வித்துறை 2011 ஆம் ஆண்டு முதல் பதவி உயர்வுகளை வழங்கி வருகிறது.
இதனை எதிர்த்து புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த பொதுநல மனுவில் புதுச்சேரி மாணவர்கள் நலன் கருதி சட்ட விரோதமாக தகுதி இல்லாத ஆசிரியர்கள் பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தார். இவ்வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது நீதியரசர் எஸ் எஸ் சுந்தர், சுதிர்குமார் ஆகியோர் முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது,
வழக்கு விசாரணையின் போது புதுச்சேரி சார்பாக புதுச்சேரி அரசு கூடுதல் வழக்கறிஞர் வசந்தகுமார் வாதிட்டு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது இந்த வழக்கு ஒரு அரசுப்பணி சம்பந்தப்பட்ட வழக்கு எனவே இது பொதுநல வழக்குக்கு உகந்ததல்ல என்று வாதிட்டார்கள் .அந்த வாதத்தை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது .தகுதி இல்லாதவர்களை ஆசிரியர் பணியிலே அனுமதிக்க முடியாது சட்ட விரோதமாக நடைபெறும் செயலை நீதிமன்றம் அங்கீகரிக்காது எனவே 3 வார காலத்திற்குள் புதுவை கல்வித்துறை இந்த வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் என்று ஒரு உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து, வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு நீதி அரசர்கள் தள்ளி வைத்துள்ளார்கள்.
English Summary
Hire unqualified teachers Chennai High Court