இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை.. விண்ணப்பித்து விட்டீர்களா?
India sports Commission Job announcement
மத்திய அரசின் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா எனப்படும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 138 உயர் செயல்திறன் ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இதற்கு தகுதியும், அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிசியோதெரபி பணியில் 42 காலியிடங்களும், வலிமை மற்றும் கண்டிஷனிங் நிபுணர்கள் பணியில் 42 காலியிடங்களும் உள்ளன.
மேலும், உடலியல் வல்லுநர்கள் பணியில் 13 காலியிடங்களும், உளவியலாளர்கள் பணியில் 13 காலியிடங்களும், பயோமெக்கானிக்ஸ் பணியில் 13 காலியிடங்களும், ஊட்டச்சத்து நிபுணர்கள் பணியில் 13 காலியிடங்களும், உயிர் வேதியியலாளர்கள் பணியில் 2 காலியிடங்களும் உள்ளன.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பணி சம்மந்தப்பட்ட பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 45 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கு மாத சம்பளம் ரூ.1,05,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள துறைகளில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். (அல்லது) முதுநிலை பட்டம் பெற்றிருப்பவர்கள் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டம் வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், https://sportsauthorityofindia.gov.in/saijobs என்ற இணையதளத்தின் மூலம் வரும் 5-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
English Summary
India sports Commission Job announcement