மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு எப்போது? வெளியானது முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக் கழகங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு அதாவது நீட் மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நீட் தோ்வு முடிவுகள் வெளியான ஓரிரு நாள்களில் அகில இந்திய கலந்தாய்வு மற்றும் மாநில அரசுகளின் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது தொடங்கிவிடும். அதன் படி இந்த ஆண்டு நீட் தோ்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி வெளியானது.

ஆனால், நீட் தோ்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, அடுத்தடுத்த பதிவெண்களைக் கொண்ட 6 போ் முழு மதிப்பெண் பெற்றது உள்ளிட்டவை நாடுமுழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், நீட் தோ்வு முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், நீட் தோ்வு தொடா்பான வழக்கு விசாரணை நீதி மன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. அதனால், அடுத்த வாரத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு தொடா்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மாநில அரசு நடத்தும் கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MBBS counsling update


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->