மாதந்தோறும் ரூ.12,400! தமிழக மாணவர்களே ரெடியா? அசத்தல் அதிரடி அறிவிப்பு வெளியானது! - Seithipunal
Seithipunal


முதுநிலை படிப்புக்கான 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.12,400 கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள், நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது சிஇஇடி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

தகுதி: பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல் ஆகிய படிப்புகளில் நடப்பு 2024-2025 கல்வியாண்டில் சேர்க்கை பெற்ற முதுநிலை மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

எவ்வளவு உதவி தொகை? தகுதி பெறும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.12,400 உதவித் தொகையாக வழங்கப்படும். 

தேவையானது என்ன? மாணவர்கள் ஏதேனும் ஒரு தேசிய வங்கியில் சேமிப்புக் கணக்கை தொடங்கி, அதுகுறித்த விவரங்களை விண்ணப்பிக்கும்போது தெரியப்படுத்த வேண்டும். 

நிபந்தனை/தகுதியின்மை : முதுநிலை படிப்பை பகுதிநேரம், தொலைதூர அடிப்படையில் படிப்பவர்கள் உதவித்தொகை பெற முடியாது. 

விண்ணப்பிப்பது எப்படி? தகுதியுள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற  https://-pgscholarship.aicte-india.org/ என்ற வலைதளம் வழியாக செப்டம்பர் 2 முதல் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

சரிபார்க்க/மேலும் விவரங்களுக்கு: அந்தந்த கல்வி நிறுவனங்கள்  மாணவர்களின் விண்ணப்பங்களை டிசம்பர் 15-ம் தேதிக்குள் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். மேலும், விவரங்களை https://www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ME Education Scholarship


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->