கடலுக்கு அடியில் மெஸ்ஸிக்கு கட் அவுட்.. மாஸ் காட்டும் கேரள ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது கடந்த நவம்பர் 20ஆம் தேதி முதல் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்றன.

இந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் நாளை (டிசம்பர் 18ம் தேதி) இரவு 8.30 நடைபெறும் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. 

இதில் அர்ஜென்டினா அணியில் உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி விளையாடி வருகிறார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக இந்தியாவில் லியோனல் மெஸ்ஸிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் அர்ஜென்டினாவின் கால்பந்து அணியின் முக்கிய வீரர்களுக்கு கேரளா ரசிகர்கள் பலரும் ஆதரவாக இருப்பார்கள். அர்ஜென்டினா ஜெர்சி அணிந்து அவர்களை போலவே விளையாடி மகிழுந்து தங்களது அன்பை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். 

இந்த நிலையில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை கொண்டாடும் முறையில் கேரளா ரசிகர்கள் கடலுக்கு அடியில் கட் அவுட் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில்‌ வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Messi cut out in under sea in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->