#BREAKING || பொறியியல் கலந்தாய்வு தள்ளிவைப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 446 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.5 லட்சம் பொறியியல் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் கல்லுரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்காக ஆண்கள் 1,06,384 பேரும், பெண்கள் 72,558 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 17 பேரும் ஏரன மொத்தமாக 1,78,959 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளின் பொறியியல் மாணவச் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். இதில் 102 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆப் எடுத்துள்ளனர். அவர்களில் 100 பேர் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்துள்ளார்கள். மேலும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி "நீட் தேர்வின் முடிவுக்காக பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2ம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்பொழுது நீட் தேர்வின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறவில்லை. இதன் காரணமாக வரும் ஜூலை 2ம் தேதி நடைபெற இருந்த பொறியியல் கலந்தாய்வு தள்ளி போகிறது. மருத்துவ படிப்புகளுக்கான முதல் கலந்தாய்வு நிறைவு பெற்ற பிறகு பொறியியல் கலந்தாய்வு தொடங்கலாம் என முடிவு செய்துள்ளோம். எனவே மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிப்பு பொறுத்து பொறியியல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Ponmudi announced engineering counseling postponed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->