இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு.!
NEET exam fees hiked
நீட் தேர்வுக்கான கட்டணம் இந்த ஆண்டு முதல் உயர்த்தப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்வு கட்டணம் 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுபிரிவினருக்கு 1500 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 1600 ரூபாயாகவும், தாழ்த்தப்பட்டோருக்கான கட்டணம் 800 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணத்துடன் ஜி.எஸ்.டி. மற்றும் சேவைக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.