நீட் தேர்வு விதிமுறைகள் - தேசிய தேர்வு முகமை வெளியீடு.!
NEET Exam Regulations National Examination Agency Publication
வரும் ஜீலை 17ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அதன்படி, மாணவர்கள் தங்களின் ஹால்டிக்கெட் உடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படுவர்.
தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அதில் வெப்பநிலை அதிகமாக இருந்தால், தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வு முடிந்த உடன் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். முக்கியமாக மதியம் 1.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதி இல்லை. மேலும், தகவலுக்கு www.nta.ac.in எனும் இணையதளத்தில் பார்க்கலாம்.
English Summary
NEET Exam Regulations National Examination Agency Publication