உயிரியல் படிக்காதர்வர்களுக்கு நீட் தேர்வு எழுத வாய்ப்பு.!
non biology students attend neet exam NMC info
தேசிய மருத்துவ ஆணையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில், "பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, மருத்துவ படிப்புக்கு தேவையான இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரிதொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கூடுதல் பாடமாக படித்தவர்களும் இனி இளநிலை நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
அவ்வாறு, கூடுதல் பாடத்தில் தேர்ச்சி பெறுவோருக்கு என்எம்சி சார்பில் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். இதைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின் மூலம் பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களைப் படித்தவர்களும் இனி நீட் தேர்வு எழுத முடியும்.
ஆனால், அவர்கள் கூடுதலாக உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்ப பாடத்தில் மத்திய அல்லது மாநில தேர்வு வாரியத்தின் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். மருத்துவ படிப்புக்கு தேவையான உயிரியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு தேர்வை மட்டும் தனியாக எழுதி தேர்ச்சி பெற்றால் கூட நீட் தேர்வு எழுத முடியாது.
English Summary
non biology students attend neet exam NMC info