அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..தேர்வுகள் ஒத்திவைப்பு-அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் காரணமாக, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கரணமாக வரும் ஜனவரி 29ஆம் தேதி நடைபெற இருந்த தேசிய திறனாய்வு தேர்வு பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வுக்கான ஹால் டிக்கெட் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் பதினோராம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் பெறும் வரை மத்திய அரசு உதவித்தொகை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTSE exam postponed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->