துணை ராணுவப் படைகளில் வேலை வேண்டுமா? முழு விவரம் இதோ...  - Seithipunal
Seithipunal


மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான பிஎஸ்எப்-இல் குரூப் 'பி' மற்றும் 'சி' பாராமெடிக்கல் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

''குரூப் பி'' பணிகள்

பணி: Staff Nurse

காலியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் 

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொது செவிலியர் பாடத்தில் பட்டயம், பட்டம் பெற்று நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: ASI (Lab technician)

காலியிடங்கள்: 38

சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் 

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் டிஎம்எல்டி முடித்திருக்க வேண்டும்.

பணி: ASI(Physio-therapist)

காலியிடங்கள்: 47

சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300

வயதுவரம்பு: 20 முதல் 27 வயதிற்குள் 

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிசியோதெரபி பாடத்தில் பட்டயம், பட்டம் முடித்து 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: SI(Vehicle Mechanic)

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ தகுதித் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வுசெய்யப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்ஐ பணிக்கு ரூ.200, ஏஎஸ்ஐ பணிக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டண விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.6.2028


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

paramilitary forces job details


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->