செவிலியர்களுக்கு இலவச மொழிப் பயிற்சி - தமிழக அரசு அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நர்சிங் படிப்பு முடித்துள்ள செவிலியர்களுக்கு வெளிநாட்டு மொழிகளான ஜெர்மன் மற்றும் ஜப்பான் மொழிகளை இலவசமாக கற்றுத் தர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் நர்சிங் படித்தவர்கள் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெறுவது எளிதாகும் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ய்பு நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான திரு. சி. என். மகேந்திரன் அவர்கள் ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். 

அந்த செய்திக் குறிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "தமிழகத்தில் உள்ள செவிலியர்களுக்கு ஜப்பான் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட மொழிகளில் இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் முதல் முறையாக முயற்சி எடுத்துள்ளது.

அதன்படி இந்த குறிப்பிட்ட வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ள விரும்பும் செவிலியர்கள் நர்சிங்கில் B.Sc அல்லது டிப்ளமோ  படிப்பை கட்டாயமாக முடித்திருக்க வேண்டும் என்ற ஒரு தகுதி மட்டும் தான் செவிலியர்களுக்கான இலவச அயல்நாட்டு மொழி பயிற்சிக்கு  நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

மேலும் செவிலியர்களின் வசதிக்கேற்ப இந்த மொழிப் பயிற்சியில் ஆன்லைனிலோ. நேரடியாகவோ அவர்கள் பங்கேற்று கற்றுக் கொள்ளலாம். மேலும் இப்பயிற்சி குறித்த விவரங்களை www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என்றும், மேலும் தேவையான விவரங்களுக்கு 63791 79200 என்ற வாட்ஸ் அப் என்னிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக அரசின் அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் சி. என். மகேந்திரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Government Decided to Free Language Training For Nurses


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->