12ம் வகுப்பு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு.. யார் யாருக்கு தெரியுமா..?
Tngovt announced exam fee exemption for 12th class students
தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குனராக இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ் வழியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோன்று காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள், கண் பார்வையற்றவர்கள் ஆகியோருக்கும் தேர்வு கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. பெற்றோர்கள் ஆண்டு வருவாய் ரூ. 2.5 லட்சத்திற்கு குறைவாக உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுவதற்கான கட்டணத்தை வரும் ஜனவரி 20ம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tngovt announced exam fee exemption for 12th class students