முதுநிலை படிப்பிற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்த நிலையில் தற்பொழுது காலியாக உள்ள இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மீண்டும் நடத்தப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அதேபோன்று தமிழக முழுவதும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடாததால் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை 14.08.2023 துவங்கி www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் எளிராத நிலையில் முதலிலை பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்கும் கால அவகாசம் 01.09.2023 வரை நீட்டிக்கப்படுகிறது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt extend application period for Masters course


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->