டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!
TNPSC group 6 forest practicener exam date announced
வனத்துறை பழகுநர் சார்ந்த குரூப் 6 பணிகளுக்கான தேர்வு வரும் 27ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த டிசம்பர் 10ம் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் வனத்துறை பழகுநர் குரூப் 6 பணிகளுக்கான தேர்வு மாண்டஸ்புயல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.30 வரையும், பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 என இரு வேலைகளிலும் தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
English Summary
TNPSC group 6 forest practicener exam date announced