இடமாற்றம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்... - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் தொடங்கப்பட உள்ளது. 

இந்நிலையில் பள்ளி கல்வித்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது, 

பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கத்தில் பணியாற்றும் 500 ஆசிரியர் பயிற்றுநர்கள் 2021-22 ஆம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியர்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 

இதனை எதிர்த்து இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், சென்னை உயர்நீதிமன்றத்திலும் மதுரை கிளையிலும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணையில், ஆசிரியர் பயிற்சிநர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களாக கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் இடமாற்றம் செய்யப்பட்ட 500 பேருக்கு பொது இடம் மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க அனுமதி வழங்க கோரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் அரசுக்கு கோரிக்கை விடுதிருந்தார். 

இந்த கோரிக்கை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்படி, 2021-22 ஆம் ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்ட 500 பேருக்கு நடப்பு ஆண்டில் பொது இடம் மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Transfer consultation graduate teachers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->