மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த ஆறு மாதங்களுக்குள் பட்டம் வழங்கப்பட வேண்டும்! பல்கலைக்கழக மானியக் குழு.! - Seithipunal
Seithipunal


மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த 6 மாதங்களுக்குள் அவர்களுக்கு பட்டம் வழங்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழு இன்று பிறப்பித்த உத்தரவில், பட்டப்படிப்பை முடித்து பல ஆண்டுகளாகியும் பல்கலைக்கழக நிர்வாகம் பட்டம் வழங்க தாமதப்படுத்தி வருவதாக மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த 180 நாட்களுக்குள் அவர்களுக்கு பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டத்தை தாமதமாக வழங்குவதால் அவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் சிரமம் ஏற்படுவதாகவும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறு 180 நாட்களுக்குள் பட்டம் வழங்காத பல்கலை கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UGC circular regarding Graduations


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->