இளநிலை மருத்துவப் படிப்புக்கான 'நீட்' தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு! - Seithipunal
Seithipunal


இளநிலை மருத்துவப் படிப்புகளின் மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வை தேசிய தோ்வு முகமை நடத்துகிறது.

இந்த நிலையில், நடப்பாண்டு கடந்த ஜூலை 17-ஆம் தேதி நாடு முழுவதும் 497 நகரங்களில் 3,570 மையங்களில் நீட் தோ்வு நடத்தப்பட்டது. இந்த தோ்வை 17.78 லட்சம் மாணவா்கள் எழுதினா்.

இந்த தேர்வில், தமிழகத்தில் இருந்து மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனா். இதனை தொடர்ந்து விடைக்குறிப்பு மற்றும் தோ்வா்களின் ஓஎம்ஆா் விடைத்தாள் நகல்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், நீட் தோ்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இதனை தொடர்ந்து, மாணவா்கள் மதிப்பெண் விவரங்களை https://neet.nta.nic.in/    
என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

நீட் தோ்வு முடிவுகள் இன்று வெளியான பின்னா் தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

undergraduate medical courses NEET examination results released today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->