திடீர் அறிவிப்பு!!!18ஆம் தேதி முதல் தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்...!
You can apply for the Elementary Education Certificate Examination announcement from the 18th
அரசுத் தேர்வுகள் இயக்கம் தற்போது செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது," வருகிற மே, ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ள தொடக்கக்கல்வி பட்டயத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையம் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து தேர்வர் வசிக்கும் மாவட்டதில் அமைந்துள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக கீழ்க்கண்ட தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், அந்த நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து தேர்வுக் கட்டணத்தினையும் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50-ம், மதிப்பெண் சான்றிதழ் (முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு) தலா ரூ.100-ம், பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15-ம், ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.70-ம் தேர்வு கட்டணமாக செலுத்தி விண்ணப்பங்களை வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் 25, 26-ந்தேதி ஆகிய 2 நாட்கள் விண்ணப்பிக்க வேண்டும். (சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.1000).
தகுதியற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படும். தபால் வழி பெறப்படும் விண்ணப்படங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
You can apply for the Elementary Education Certificate Examination announcement from the 18th