கை விரித்த பாரதிராஜா குடும்பத்தினர்.. மருத்துவ செலவு மொத்தத்தையும் ஏற்ற முக்கிய தலைவர்.!
Ac shanmugam Hepls To Barathiraja
இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சமீபத்தில் தி.நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக எம் ஜி எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஐஸியுவில் வைக்கப்பட்டு பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எம்ஜிஎம் மருத்துவ குழுவினர் தகவல் தெரிவித்தனர்.
அத்துடன் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர். பாரதிராஜாவுக்கு மிகவும் நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. அவருக்கான மருத்துவ செலவுகளை பாரதிராஜாவின் குடும்பத்தினர் ஏற்கமுடியாது என்று கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது.
அவரது மருத்துவ செலவுகள் முழுவதையும் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏசி சண்முகம் ஏற்றுக் கொண்டதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் பாரதிராஜா வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. வீடு திரும்பியதும் 50 நாட்களாவது அவர் ஓய்வெடுக்க வேண்டும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக என்று கூறப்படுகிறது.
English Summary
Ac shanmugam Hepls To Barathiraja