அதிமுக பஞ்சாயத்து முக்கிய புள்ளியிடம் செல்கிறது.! யார் முதலில்...? ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே புதிய போட்டி.! - Seithipunal
Seithipunal


சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை, யார் முதலில் சந்திப்பது என்று ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு இடையில் போட்டி மூண்டுள்ளதாக, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுகவில் அடுத்தடுத்த பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாகவே இந்த மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. அதிமுகவின் இந்த ஒற்றை தலைமையை யார் கைப்பற்றுவது என்பதில் தற்போது ஓ பன்னீர்செல்வத்திற்கும், எடப்பாடி பழனிசாமி க்கும் இடையே கடுமையான போட்டி நடந்து கொண்டிருக்கிறது. 

இந்த போட்டி தற்போது சட்ட ரீதியாக நடந்து கொண்டிருக்கிறது. இதில், எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு ஆதரவு இருப்பதால், அவரின் கை ஓங்கி இருக்கிறது. 

முன்னதாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே பிரச்சனை வரும் போதெல்லாம், பாஜக தலைவர்கள் இடையில் தலையிட்டு பஞ்சாயத்தை தீர்த்து வைத்ததாக அவ்வபோது அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. 

குறிப்பாக திமுக இதனை பெரும் குற்றச்சாட்டாக முன்வைத்து வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர இருக்கிறார். அப்போது அதிமுகவில் நடக்கும் இந்த ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்ய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், யார் முதலில் சென்ற பிரதமர் மோடியை சந்திப்பது என்பது குறித்த போட்டியும் மூண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பாஜகவை பொருத்தவரை அதிமுகவில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி இணைந்து செயல்படுவதை தான் விரும்புவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ops vs eps issue july 27


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->