பார்வையற்ற மாணவர்களை பசியோடு பரிதவிக்க வைத்த உதயநிதி! கைக்கு எட்டிய பிரியாணியை, வாய்க்கு எட்ட விடாமல் தடுத்த துயரம்!  - Seithipunal
Seithipunal


தமிழ் நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் வந்தார். அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் பயணம் என்பதால் அவருக்கு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். 

இதில் ஒரு நிகழ்ச்சியாக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக, தஞ்சாவூர் அரசு பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டன் பிரியாணி மதிய சாப்பாடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த உணவினை அமைச்சர் உதயநிதி கையால் பரிமாறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

மதியம் உணவு நேரம் வந்ததும், தட்டில் மட்டன் பிரியாணியை போட்டதுடன், மாணவர்களை உணவுத்தட்டின் முன் உட்கார வைத்தனர். கிட்டதட்ட இரண்டு மணி நேரத்திற்க்கு மேல் தாமதமாக மூன்று மணியளவில் தான் உதயநிதி வந்திருக்கிறார். அதன் பின்னரே மாணவர்களை சாப்பிட அனுமதித்துள்ளனர். 

அப்பள்ளி மாணவர்கள் எப்போதும் சரியாக 12.30 மணிக்கு சாப்பிட்டு விடுவார்கள். அந்த நேரத்திற்குள் உதயநிதி வந்து விடுவார் என கூறியிருந்தனர். அவர் வருவதற்கு தாமதமானதால் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டும் உதயநிதி வந்த பிறகு சாப்பிடலாம் என காக்கவைத்துள்ளனர்.உதயநிதி வந்த பிறகு தான் சாப்பிட வேண்டும், யாரும் தட்டில் கை வைக்க கூடாது என  தி.மு.க-வினர் சொல்லிவிட்டனர். நேரம் போனதே தவிர உதயநிதி வரவே இல்லை. 

மாணவர்கள் பசியால் தவித்து கொண்டிருந்தார்கள். தட்டிற்கு வந்த பிரியாணி காய்ந்து விட்டது. கிட்டதட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் பிரியாணி வாசனையை உணர்ந்தார்களே தவிர, சுவையை அனுபவிக்க விடாமல் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எல்லாவற்றையும் விட கொடுமை என்னவென்றால் உதயநிதி எப்படி இருப்பார் என்பதை அறியாத பார்வையற்ற மாணவர்கள், அவர் குரலையாவது கேட்கலாம் என நினைத்திருந்தால், அவர் ஒரு வார்த்தைக் கூட பேசாமல், நாலு மாணவர்களின் தட்டில் இனிப்பை பரிமாறிவிட்டு சென்றுவிட்டாராம். அங்கே இருந்த பள்ளி ஊழியர்கள் இதனை சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

disabled students waiting for food infront of table for udhayanithi coming


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->