ஓ.பி.எஸ்-ஸால் எழுந்தே வர முடியாத ஒரு அடி.. இ.பி.எஸ் போட்ட மாஸ்டர் பிளான்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.?! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை தலைதூக்கி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. சமீபத்தில், அதிமுக தலைமையில் பொதுக்குழு நடைபெற்றதில் ஒரு மனதாக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். கட்சியிலிருந்து, பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

இதை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து எடப்பாடி மேல்முறையீடு செய்த நிலையில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில், அடுத்ததாக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

நிலைமை இப்படி இருக்க ஓபிஎஸ்-க்கு அடுத்த அடியை கொடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு மாஸ்டர் பிளான் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஓபிஎஸ் கட்சியில் இல்லை என்ற காரணத்தால் அதிமுக என்ற பெயரை அவர் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர போகிறதாம்.

அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் கூட ஓபிஎஸ் இல்லாத நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று அவர் எப்படி கூறலாம் என்பது தான் அந்த வழக்கு. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், ஓபிஎஸ் அதிமுக என்ற பெயரை கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

அதன் பின் அவர் புதிய கட்சியோ, புதிய இயக்கத்தையோ தான் நடத்த முடியும். தன்னை அதிமுகவை சார்ந்தவராக எந்த இடத்திலும் அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது. இது குறித்து இபிஎஸ் தரப்பினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPs Has evil plan to Attack Ops


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->