பஞ்ச பூதங்களில் உங்கள் ராசி எந்த இடத்தில் உள்ளது என்பதை பார்ப்போம்! - Seithipunal
Seithipunal


12 ராசிகளுக்கும், பஞ்ச பூதங்களுக்கும் உள்ள தொடர்புகளை பற்றி பார்ப்போம்.

நெருப்பு ராசிகள்:

*மேஷம்
*சிம்மம்
*தனுசு

இந்த மூன்று ராசிகளையும் நெருப்பு ராசிகள் என்று அழைப்பார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் அளவுக்கு அதிகமாக கோபப்படுவார்கள். நெருப்பு ராசியாக இருப்பவர்கள் கோபமாகவும், முரட்டுத்தனமாகவும், தைரியமாகவும் தலைமைப் பொறுப்புடன் இருப்பார்கள்.

நில ராசிகள்:

*ரிஷபம்
*கன்னி
*மகரம்

இந்த மூன்று ராசிகளையும் நில ராசிகள் என்று அழைப்பார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் பெரும்பாலான நேரங்களில் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள். நில ராசியாக இருப்பவர்கள் சாந்தமாக விட்டுக்கொடுக்கும் குணத்துடனும், அன்பு நிறைந்து மனத்துடனும், ஒழுக்கத்துடனும், பாசத்துடனும் நல்வழியில் செல்பவர்களாக இருப்பர்.

காற்று ராசிகள்:

*மிதுனம்
*துலாம்
*கும்பம்

இந்த மூன்று ராசிகளையும் காற்று ராசிகள் என்று அழைப்பார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்களின் மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. காற்று ராசியாக இருப்பவர்கள் தற்பெருமையுடன் உயர்ந்த ஆராய்ச்சியுடன் அறிவாளிகள் புடைசூழ சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும், எந்த நேரமும் ஆலோசனை செய்து கொண்டும் இருப்பார்கள்.

நீர் ராசிகள்:

*கடகம்
*விருச்சிகம்
*மீனம்

இந்த மூன்று ராசிகளையும் நீர் ராசிகள் என்று ஜோதிடர்கள் அழைக்கிறார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். நீர் ராசியாக இருப்பவர்கள் அமைதியாகவும், ஞானத்துடன் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pancha bhoota in rasipalan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->