மிக மோசமான மாசுபட்ட நாடுகளின் பட்டியல்: முதலிடம் பிடித்த பாகிஸ்தான்! இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
Pakistan most polluted countries
சுவிஸ் சார்ந்த காற்றுத் தர ஆய்வு நிறுவனம் IQAir வெளியிட்டுள்ள 2024 உலக காற்றுத் தர அறிக்கையில், உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் முதன்மையான 5 நாடுகள்:
- சாட்
- வங்கதேசம்
- பாகிஸ்தான்
- காங்கோ
- இந்தியா
மேலும், உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றில், அசாமில் உள்ள பைர்னிஹாட், டெல்லி, முல்லன்பூர், பரிதாபாத், லோனி, புதுடெல்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர், நொய்டா ஆகியவை அடங்கும்.
புதுடெல்லி உலகின் மிக மாசுபட்ட தலைநகரமாக இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
2023-இல் 3-வது இடத்தில் இருந்த இந்தியா, 2024-இல் 5-வது இடத்திற்கு பின்னடைவை சந்தித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு புகைமூட்டம் காரணமாக பஞ்சாப் மாநிலம் பேரிடராக அறிவிக்கப்பட்டது. அப்போது சுமார் 20 லட்சம் பேர் உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்றனர்.
English Summary
Pakistan most polluted countries