தஞ்சையில் ரவுடி வெட்டி படுகொலை! சினிமா பாணியில் நடந்த கொடூர கொலை!
Thanjai Rowdy Murder case
தஞ்சாவூர் மாவட்டம், ஏழுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த குறுந்தையன் என்ற சரித்திர குற்றவாளி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறுந்தையன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்லும் வழியில், அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் காரை குறுந்தையன் மீது மோதி இழுத்துள்ளனர்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த குறுந்தையன் மீது தாக்குதல்காரர்கள் காரிலிருந்து இறங்கி கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். சம்பவ இடத்திலேயே குறுந்தையன் உயிரிழந்தார்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் குறுந்தையனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில், குறுந்தையன் கடந்த 2013-ல் உலகநாதன் மற்றும் 2014-ல் உதயா ஆகியோரை நண்பர்களுடன் இணைந்து கொலை செய்துள்ளதாக தெரியவந்தது. அந்தக் கொலைக்குப் பழியாகவே குறுந்தையன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
குறுந்தையன் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டபஞ்சாயத்து போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறுந்தையன் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Thanjai Rowdy Murder case