100 குடும்பங்களுக்கு ஒரு கோடி - விஜய் தேவரகொண்டா செய்த நெகிழ்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


100 குடும்பங்களுக்கு ஒரு கோடி - விஜய் தேவரகொண்டா செய்த நெகிழ்ச்சி சம்பவம்.!

ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் குஷி. இந்தப் படம் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 70 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வருகிறது. இதற்கிடையே, இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில், கலந்துகொண்டு பேசிய விஜய் தேவரகொண்டா, "எனது ஊதியத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை தலா ஒரு லட்சம் வீதம் 100 குடும்பங்களுக்கு கொடுப்பேன். இந்த தொகை ஹைதராபாத்தில் நடைபெறும் குஷி நிகழ்ச்சிக்கு முன்னதாக கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்தது போலவே,100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay devara konda give money to 100 families


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->