"மெட்ராஸ் ஐ" பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்! மருத்துவர்கள் தரும் ஆலோசனை என்ன? - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாக மெட்ராஸ் ஐ எனும் கண் நோய் பொதுமக்களிடையே அதிகமாக பரவி வருகிறது. தற்பொழுது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் நோய் பரவல் ஏற்பட்டுள்ளது. மெட்ராஸ் ஐ எனும் நோய் குழந்தைகளிடையே அதிகம் பரவக்கூடியது. குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்களிடையே இது வேற வேகமாக பரவும். நோய் பரவல் கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவர்கள் ஒரு சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.  

அதன்படி,

"1) மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய டிஷ்யூ பேப்பர் மற்றும் கை குட்டைகளை உடனே அகற்ற வேண்டும். 

2) மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய காண்டெக்ட் லென்ஸ்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

3) மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர் கைகளை கழுவி அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். 

4) மருத்துவரின் ஆலோசனைப்படி தான் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

5) கண்களில் திரவ சுரப்பு முற்றிலும் நிற்கும் வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். 

6) மெட்ராஸ் ஐ நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய தலையணை உறை, ஒப்பனை பொருட்கள் (Make-up set), துண்டு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது.

7)கண் சிவந்து இருந்தால் அது மெட்ராஸ் ஐ நோயாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

8) கண் சிவந்து இருந்தால் அது கண் கருவிழி பிரச்சனை அல்லது கண் அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் இருக்கலாம்.

9) மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் சுய மருத்துவம் செய்து கொள்ளக் கூடாது.

10) மருந்தகங்களில் சுயமாக கண் மருந்துகளை வாங்கி பயன்படுத்தக் கூடாது. 

11) மெட்ராஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால் மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கப்படும்" என மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Advice by doctors to prevent the spread of Madras Eye


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->