நலன் தரும் முத்திரை: தண்டுவடத்தை பாதுக்காக்கும் அனுசான முத்திரை..!
Anushasan Mudra
முத்திரை என்பது கைவிரல் நுனிகளை இணைத்து செய்வதாகும். நமது கைவிரல் நுனி பஞ்ச பூதத்தின் தன்மையை கொண்டுள்ளது, பெருவிரல் – நெருப்பு, சுண்டு விரல் – நீர், மோதிர விரல் – நிலம், நடுவிரல் – ஆகாயம், ஆள்காட்டி விரல் –காற்று இப்படி பஞ்ச பூத சக்தியை விரல் நுனி கொண்டுள்ளது. கைவிரல்களை இணைத்து முத்திரைகள் செய்யும் போது உள் உறுப்புகள் நன்றாக இயங்கும். தற்போது தண்டுவடத்தை திடமாக்கும் அனுசாசன முத்திரை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்.
அனுசாசன முத்திரை:
விரிப்பில் நிமிர்ந்து உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். விரிப்பில் அமர முடியா தவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும்.
சுண்டுவிரல், மோதிர விரல் நடுவிரலை உள்ளங்கைக்குள் மடக்கி கட்டை விரலை மோதிர விரலில் படும்படி வெளியில் வைக்கவும். ஆள்காட்டிவிரலை மேல் நோக்கி நீட்டி கொள்ளவும். இந்த முத்திரையை தினமும் இரண்டு நிமிடங்கள் செய்து வர முதுகு தண்டு வடம் பலம் பெறும்.