நீங்கள் 'டீ' குடித்தவுடன் தண்ணீர் குடிக்கும் பழக்கமுள்ளவரா..? அப்போ இது உங்களுக்குத் தான்... - Seithipunal
Seithipunal



அனைவருக்கும் மிகப் பிடித்தமான பானம் என்றால் அது 'டீ' என்று சொல்லலாம். ஏனெனில் உழைக்கும் வர்க்கத்தினர் முதல் பெரும் பணக்காரர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் பானமாக டீ உள்ளது. அப்படிப்பட்ட டீ யை குடித்து விட்டு உடனே பலரும் தண்ணீரை குடிப்பார்கள். ஆனால் அது எவ்வளவு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று இங்கு பார்ப்போம்.

டீ குடித்த உடனே தண்ணீர் குடித்தால் பற்கள் மஞ்சள் நிறமாகி விடும். மேலும் வயிற்றில் அமிலம் சுரக்கும். வலி மற்றும் செரிமான பிரச்சினையை ஏற்படுத்தும். வயிற்றில் வாயு உருவாக்கும். வயிற்று உப்புசம் ஏற்படும். மேலும் மலச் சிக்கல் உண்டாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் டீ குடித்த உடன் தண்ணீர் குடிப்பதால் வயிற்றில் புண் ஏற்படும். வயிற்றுப் பகுதியில் உள்ள நரம்புகள் பாதிக்கப் படும். மேலும் பற்களின் மேல் அடுக்குகள் பாதிக்கப் பட்டு, எனாமல் சேதமைடயும் என்றும், மேலும் பற்களில் துவாரங்கள் ஏற்பட்டு, பற்களின் உணர்ச்சித் திறன் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஒரு சிலர் மிக சூடாக டீ குடித்து விட்டு, உடனேயே தண்ணீர் குடிப்பார்கள். அப்படி செய்தால் சிலருக்கு சில நேரங்களில் ஒவ்வாமை ஏற்ப்பட்டு இருமல், சளி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மேலும் தொண்டை புண்ணாகி வீக்கம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் யாவரும் டீ குடித்த உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்த்தால், இந்த பிரச்சினைகளில் இருந்து உங்களை காத்துக் கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Are You Drinking Water After Tea Read This


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->