கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய பீன்ஸ்.. எப்படியெல்லாம் பலன்கள் இருக்கிறது.?!
Beans benefit for pregnant ladies
பொதுவாகவே நாம் சாப்பிடும் காய்கறிகளில் அதிக நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் பீன்ஸ் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் உள்ளன. உடல் எடை குறைக்க பீன்ஸ் பயன்படுகிறது.
பீன்ஸ் கொழுப்பை குறைக்க உதவுகிறது. மற்றும் மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கச் செய்யும். பீன்ஸில் நிறைய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் நாம் சாப்பிடும் போது விரைவாக ஜீரணம் ஆகிவிடும்.
கர்ப்பமாக இருப்பவர்கள் இதை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். இதில் நார்ச்சத்தும் இரும்பு சத்தும் அதிகம் உள்ளது. மேலும், பீன்ஸ் சாப்பிடுவதால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும்.
எலும்புகளுக்கு வலுவை சேர்க்கும். தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சிறுநீரகத்தில் கல் பிரச்சனை தீர்வு கிடைக்கும். கண் பார்வையை சரி செய்யும்.
English Summary
Beans benefit for pregnant ladies