கொழுப்பு மாமிசத்துக்கு குட்பை சொல்லுங்க.! பீன்ஸ் ஒன்னு போதும் இனி.!
Beans Protein and Fiber make You healthy
பீன்ஸ் என்பவை 'ஃபேபேசி' குடும்பத்தைச் சார்ந்த விதைகள் ஆகும். இவை பருப்பு பட்டாணி மற்றும் பீன்ஸ் வகைகள் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது .
இந்த பீன்ஸ் விதைகளில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
நடுத்தர குடும்ப மக்கள், எளிய மக்கள் என அனைவருக்கும் ஊட்டச்சத்துக்களை அள்ளி தரும் காய்கறிகளில் பீன்ஸ் ஒன்றாகும்.
தொடர்ந்து பீன்சை தங்களது உணவில் எடுத்துக் கொள்பவர்கள் மாரடைப்பு மற்றும் இதய நோயினால் இறப்பது குறைவதாக உள்ளதாக 2017 ஆம் ஆண்டின் மெட்டா பகுப்பாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. பீன்ஸில் இருக்கக்கூடிய அதிகப்படியான புரதமானது நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதோடு கெட்ட கொழுப்புகளையும் கட்டுப்படுத்துகிறது .
மேலும், பீன்ஸில் காணப்படும் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் நம் உடலில் இருக்கின்ற உணவு செரிமானத்திற்கு வேகத்தை கொடுக்கிறது. இதனால், உணவானது எளிதில் ஜீரணம் ஆகி நம் உடலில் கெட்ட கொழுப்புகளின் தேக்கத்தை தடுக்கிறது.
தொடர்ந்து நம் உணவில் அதிக கொழுப்புள்ள இறைச்சிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக பீன்ஸை பயன்படுத்துவதன் மூலம் அதில் இருக்கக்கூடிய ஆக்ஸிஜனேற்ற மூலக்கூறுகள் கெட்ட கொழுப்புக்களின் உற்பத்தியை தடுக்கின்றன.
இதனால், அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் ரத்த குழாய்களில் தாங்காமல் தடுத்து கொள்ள உதவுகிறது.
English Summary
Beans Protein and Fiber make You healthy