உங்களுக்கு தெரியுமா? முட்டைகோஸ் சாப்பிட்டால் இந்த பாதிப்பெல்லாம் வராது..!
Benefits Of Cabbage
முட்டைகோஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை அள்ளி தருகிறது. உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன அதிக அளவில் முட்டைகோஸில் உள்ளது. முட்டைகோஸ் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்போம்.
கண்பார்வையை கோளாறுகளை போக்க உதவும். முட்டைகோஸில் உள்ள வைட்டமின் சி கண்கள் சம்மந்தமான நோய்கள் நீங்கும்.
மூல நோய், அஜூரணம் போன்றவற்றிற்கு தீர்வளிக்கும். வியர்வைப் பெருக்கியாக செயல்பட்டு சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.
முட்டைகோஸில் அதிக அளவு சுண்ணாம்புச்சத்து இருப்பதால் எலும்புகளுக்கு பலமளிக்கும். நரம்புகளுக்கு வலு கொடுத்து நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
முடி உதிர்த்தல் சிலருக்கு மிகபெரிய பிரச்சனையாக இருக்கும். அவர்ள் எல்லாம் முட்டைகோஸை தினம் சாப்பிட்டு வர முடி உதிர்தலை குறைத்து மயிர்கால்கள் பலம் பெறும்.
முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். முட்டைகோஸ் சரும வறட்சியை நீக்கும்.