உச்சி முதல் பாதம் வரை.. அனைத்து நோய்களையும் அடித்து நொறுக்கும் கரிசலாங்கண்ணி.! - Seithipunal
Seithipunal


வயல் வரப்புகளில் கிடைக்கும் மூலிகை தாவரம் கரிசலாங்கண்ணி. இது முடிக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது என்று தான் நாம் அனைவரும் அறிந்திருப்போம். பல நோய்களுக்கு இது மருந்தாக பயன்படுகிறது. அது என்னென்ன என்பது குறித்து இங்குக் காண்போம்.

* ரத்த சோகை நோய் ஏற்பட்டவர்கள் ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை சாப்பிட்டால் ரத்த சோகை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

* குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் நீங்க வெந்நீரில் கரிசலாங்கண்ணிச்சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து கொடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், கரிசலாங்கண்ணி சாறு 100 மி.லி, நல்லெண்ணெய் 100 மி.லி, அதிமதுரம் 10 கிராம் போன்ற வைகளை சேர்த்து காய்ச்சி, தினமும் காலையும், மாலையும் 5 மி.லி வீதம் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் குரல் கம்மல் உள்ளிட்டவை குணமாகும்.

* கரிசலாங்கண்ணி இலையை தலைக்கு தேய்த்தால் தலைநோய், தூக்கமின்மை நீங்கும். கண்பார்வை அதிகரிக்கும். முடி உதிர்தல் நீங்கி முடி ஆரோக்கியமாக வளரும். இந்த கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, மென்று பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல வெண்மை நிற மடையும். ஈறுகள் பலப்படும். 

* சுவாசப்பை கழிவுகள் மற்றும் சிறுநீர கத்தில் உள்ள யூரியா போன்ற கழிவுகளையும் கரிசலாங்கண்ணி நீக்கும். ஒற்றை தலைவலியால் துன்பப்படுகிறவர்கள் இந்த கீரையை மென்று உள்நாக்கில் தேய்க்கவேண்டும். இதன் மூலம் பித்தம் நீங்கி தலைவலி அகலும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of kaisalanganni


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->