தினமும் முள்ளங்கி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா.?
Benefits of mullanki vegetables
தினந்தோறும் சாப்பிடும் காய்கறிகளில் பல நல்ல சத்துக்களை கொண்ட காய்கறிகளில் முக்கியமான காய்கறி முள்ளங்கி. அந்த வகையில் முள்ளங்கியில் பலவகை சத்துக்கள் நிறைந்துள்ளது.
அந்த வகையில் உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரும் முள்ளங்கியின் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம். அதன்படி முள்ளங்கியில் வைட்டமின் பி, சி, கே, பொட்டாசியம், நார்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு தேவையான அந்தோசியனின் முள்ளங்கியில் நிறைந்துள்ளது.
முள்ளங்கி சாப்பிடுவதால் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. மேலும் இன்சுலின் செயல்பாட்டை அதிகரித்து ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
![](https://img.seithipunal.com/media/IMG_20230703_223644-d462r.jpg)
முள்ளங்கி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் வைட்டமின் சி-யை கொடுக்கிறது. மேலும் பசியையும் அதிகரிக்க செய்யும்.
மேலும் முள்ளங்கி சாப்பிடுவதால் செரிமான மண்டலம் வலுவடைந்து உணவு நன்றாக ஜீரணம் ஆகும். அதன் காரணமாக மலக்குடலில் உள்ள கழிவை வெளியேற்றி குடலை சுத்தமாக வைக்க உதவும்.
முள்ளங்கி சாப்பிடுவதால் கல்லீரல் உள்ள கழிவுகள் வெளியாகி உடல் சுத்தமடைய செய்கிறது.
குறிப்பாக முள்ளங்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக வைக்க உதவும்
English Summary
Benefits of mullanki vegetables