இது தெரிஞ்சா.. இனி பெருஞ்சீரகத்தை சும்மா விட மாட்டீங்க.! இந்தளவிற்கு சக்தி வாய்ந்ததா.?!
Benefits of Perunjeeragam
சமையலறையில் பெருஞ்சீரகம் முக்கிய இடம் வகிக்கிறது. பெருஞ்சீரகத்தில் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பெருஞ்சீரகத்தை உணவில் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என பார்போம்.
நார்ச்சத்து நிறைந்தது: பெருஞ்சீரகம் அதிக அளவில் கொண்டுள்ளது. ஒரு தேக்கரண்டி அதாவது சுமார் 6 கிராம் உலர்ந்த பெருஞ்சீரகம் விதைகள் மூலம் சுமார் 2 கிராம் நார்சத்து கிடைக்கிறது.
ஆண்டிமைக்ரோபியல் தன்மை கொண்டது: பெருஞ்சீரகத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், ஆன்டிஃபங்கல் குணங்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன இதனால் உடலில் தேவையற்ற வாயு கோளாறுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அகற்றும்.
கேன்சரிலிருந்து பாதுகாக்க : பெருஞ்சீரக விதைகள் சக்திவாய்ந்த கீமோ மாடுலேட்டரி விளைவுகளை (chemo modulatory effects) கொண்டுள்ளன. இது தோல், வயிறு மற்றும் மார்பகங்களை பல்வேறு புற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் ஃப்ரீ ரேடிக்கல் பண்புகள் கொண்டவையாகும்.
சரும சுருக்கம்: இதில் இருக்கும் சக்திவாய்ந்த ஆன்டி ஏஜிங் பண்புகள் சரும சுருக்கங்களை கட்டுக்குள் வைக்க உதவும். இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல் ஸ்கேவஞ்சர்களை எதிர்த்துப் போராடும். அவை ஆரோக்கியமான தோல் செல்களில் இருந்து ஆக்ஸிஜனை வெளிபடுத்த உதவும்.
English Summary
Benefits of Perunjeeragam