பிரண்டையில் இவ்வளவு நன்மைகளா? - வாங்க பார்க்கலாம்.!
benefits of pirandai
கொடி வகைகளில் ஒன்று பிரண்டை. மெல்லிய குச்சி போன்ற அமைப்புடைய இந்த பிரண்டையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* பிரண்டையை சாப்பிடுவதன் மூலம் வயிற்று வலி, ஜீரணக் கோளாறுகள், மாதவிலக்கு கோளாறுகள், ஆஸ்துமா, ரத்த மூலம் உள்ளிட்ட சிக்கல்கள் தீரும் எனக் கூறப்படுகிறது.
* அதிலும் இந்த பிரண்டையைத் துவையல் செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் சுறுசுறுப்பு பெறவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளை நரம்புகளை பலப்படுத்தவும் உதவுகிறது.
* அஜீரணம், பசியின்மை, இரைப்பை அலர்ஜி உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த பிரண்டை துவையல் சிறந்த மருந்தாக உள்ளது. அதிலும் குறிப்பாக மூலம் மற்றும் குடற்புழு நீக்குவதற்குப் பிரண்டை சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது.
* மூச்சு பிடிப்பு காரணமாக ஏற்படும் முதுகுவலி, கழுத்து வலி உள்ளிட்டவற்றால் ஏற்படும் தலையை அசைக்க முடியாமலும் அவதிப்பட நேரிடலாம். இந்தப் பாதிப்பில் இருந்து இருந்து விடுபட பிரண்டை துவையல் முக்கிய பங்கு வகிக்கிறது.
* மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் உள்ளிட்ட சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம். பிரண்டையை நெய் விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியத்தில் நல்ல பலன் கிடைக்கும்.